Make Money

World News

Entertainment

Advertise

Blog Archive

குரங்கு விரட்டியதால் கல்லூரி மாடியிலிருந்து விழுந்து மாணவி பலி

Written By Admin on Saturday, 15 October 2011 | 10:41


காரைக்கால் அடுத்த நிரவி கீழராஜவீதியை சேர்ந்தவர் நைனா மரைக்காயர். சவுதியில் வேலை செய்கிறார். இவரது மகள் மெகபூப்நிஷா(19). அங்குள்ள அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியில் முதலாமாண்டு ஹோம் சயின்ஸ் படித்து வந்தார். கல்லூரியில் குரங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இவர் நேற்று காலை வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றார். கல்லூரியின் பழைய கட்டிடத்தில் 2வது மாடியில் உள்ள இவரது வகுப்புக்கு அருகே திடீரென மெகபூப்நிஷாவின் அலறல் சத்தம் கேட்டது. சக மாணவிகள் ஓடி வந்து பார்த்தனர்.

அப்போது அவர், மாடியிலிருந்து கீழே விழுந்து நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந் தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவிகள் பதறி துடித்தனர். இது குறித்து கல்லூரிக்கு எதிரே உள்ள மகளிர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து மாணவியை மீட்டு காரைக்கால் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மெகபூப்நிஷா பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து மாணவிகள் கூறுகையில், ‘‘ கல்லூரி வளாகத்தில் குரங்குகள் அடிக்கடி நிறைய வந்து செல்கிறது. இதனால் பல மாணவிகள் அச்சமடைந்துள்ளனர். மெகபூப்நிஷா வும் குரங்குக்கு பயந்து ஓடுகையில் தவறி கீழே விழுந்து இறந்திருக்கலாம்‘‘ என்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

அமைச்சர் முற்றுகை: காரைக்கால் அரசு விழாவுக்கு வந்த புதுச்சேரி சமூக நலத்துறை அமைச்சர் ராஜவேலு, எம்எல்ஏ நாஜிம் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று மாணவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். கல்லூரிக்கு விசாரணை நடத்த வந்த அமைச்சரை தமுமுக, தவ்கீத் ஜமாஅத், மனிதநேய மக்கள் கட்சியினர்  முற்றுகையிட்டு கல்லூரி வளாகத்தில் நடமாடும் குரங்குகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

நவீன கண்புரை அறுவை சிகிச்சை: இத்தாலியில் நேரடி ஒளிபரப்பு

Written By Admin on Saturday, 8 October 2011 | 02:04

 
சென்னை தனியார் கண் மருத்துவமனையில் செய்யப்பட்ட "குளூட் ஐ.ஓ.எல்.,' கண்புரை அறுவை சிகிச்சை, இத்தாலியில் உள்ள ரோமில் நடந்த கண் மருத்துவ மாநாட்டில், நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. 60 வயது முதியவருக்கு, இந்த நவீன அறுவை சிகிச்சையை, டாக்டர் அமர் செய்தார்.
ரோமில், "சிக்கலான சூழலில் கண்புரை அறுவை சிகிச்சை' என்ற தலைப்பில் நடத்த இம்மாநாட்டில், 200க்கும் மேற்பட்ட டாக்டர்கள் பங்கேற்றனர். "வீடியோ கான்பரன்ஸ்' மூலம், சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்றனர்.

டாக்டர் அமர் கூறியதாவது:கண்ணில் லென்சை தாங்கிப் பிடிக்கும் கேப்ஸ்யூல் சேதப்படும்போது அல்லது போதுமான அளவு அது ஒத்துழைக்காத நிலையில், லென்ஸ், அங்கும் இங்கும் நகரக் கூடும். வயோதிகம், கண்ணில் அடிபடுதல் அல்லது பட்டாசு வெடித்து காயம் ஏற்படுதல் போன்ற நிலைகளில், லென்ஸ் நகரும்.இதுபோன்ற நிலையில், குளூட் இன்ட்ரா ஆக்குலர் லென்ஸ் (ஐ.ஓ.எல்.,) பொருத்தி இக்குறையை நிவர்த்தி செய்யலாம். இத்தொழில்நுட்பத்தின்படி, கண்ணில் 2 முதல் 3 மி.மீ., அளவில் சிறிய துளையிட்டு இன்ட்ரா ஆக்குலர் லென்சை புகுத்தி, தையல் இல்லாமல், ஒருவித உயிரி பசை (பைப்ரின்) பயன்படுத்தி, பொருத்தப்படும்.குளூட் ஐ.ஓ.எல்., தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மல்டிபோகல் ஐ.ஓ.எல்., அறுவை சிகிச்சையும் செய்யப்படுகிறது. இதனால், சிக்கல் நிறைந்த கண்புரை அறுவை சிகிச்சைக்குப் பின், நோயாளிகளுக்கு மேம்பட்ட பார்வை கிடைக்கும். இத் தொழில்நுட்பம், "ஆன்டீரியர் செக்மென்ட்' கண் மாற்று அறுவை சிகிச்சையிலும் பயன்படுத்தப்படுகிறது.இவ்வாறு டாக்டர் அமர் கூறினார்.

பிடிவாதத்தால் நிறைய இழந்துவிட்டேன் : நயன்தாரா வேதனை!!


I loses lot says nayanthara
 என் பிடிவாதத்தால் பல விஷயங்களை இழந்திருக்கிறேன்; இருந்தாலும் பிடிவாத குணத்தை என்னால் மாற்ற முடியவில்லை என்று நடிகை நயன்தாரா வேதனை தெரிவித்துள்ளார். சிம்புவுடன் காதல் முறிவைத் தொடர்ந்து, நடிகர் பிரபுதேவாவுடன் காதல் வயப்பட்டிருக்கும் நடிகை நயன்தாரா, விரைவில் பிரபுதேவாவை திருமணம் செய்யவுள்ளார். இந்த திருமணத்துக்கு இடையூறாக இருந்த காதல் மனைவி ரமலத்தை, நடிகர் பிரபுதேவா சமீபத்தில் விவாகரத்து செய்தார். திருமண கனவுகளுடன் சமீபத்தில் கேரள பத்திரிகை ஒன்றிற்கு மனம்திறந்த பேட்டியளித்துள்ளார் நயன்தாரா. அதில் தன்னுடைய பிடிவாத குணம் பற்றி கூறி வேதனைப்பட்டிருக்கிறார்.

நயன்தாரா பேட்டியில், "பிடிவாதம்தான் என் கெட்ட குணம். ஒரு முடிவு எடுத்து விட்டால், எந்த இழப்பு வந்தாலும் அதை செய்து பார்க்க ஆரம்பித்து விடுவேன். இந்த குணத்தால் பல விஷயங்களை இழந்திருக்கிறேன். இருந்தாலும் என்னால் மாற முடியவில்லை; என்னை மாற்றிக் கொள்ளவும் முடியவில்லை, என்று வேதனையுடன் தனது நெகட்டிவ் பக்கங்களை கூறியிருக்கிறார்.

சவால் விட்ட சல்மான்! பூச்சியை சாப்பிட்ட அசின்!!


Salman challanged asin to eat a bug
பூச்சியை சாப்பிட சொல்லி அசினிடம், சவால்விட்ட சல்மான் கான் அதில் தோற்றுவிட்டாராம். நடிகர் சல்மான் கானும், அசினும் சேர்ந்து "ரெடி" படத்தில் நடித்தனர். அந்த படப்பிடிப்பின்போது சல்மான், அசினிடம் சவால்விட்டதாகவும், அதில் அவர் தோற்று விட்டதாகவும் இப்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த சுவாரஸ்யமான சவால் பற்றி அசின் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

அசின் தனது பேட்டியில், "ரெடி" படப்பிடிப்பின் போது, சல்மான், பாங்காக் வனப்பகுதியில் இருந்து பிடித்து வந்த பூச்சியை வைத்திருந்தார். திடீர் என்று இந்த பூச்சியை நீங்கள் சாப்பிடுங்கள் பார்ப்போம் என்று சவால்விட்டார். பொதுவாக பெண்கள் பூச்சிகளைப் பார்த்தாலே ஓடுவார்கள். அதனால் தான் அவர் தைரியமாக சவால் விட்டார். ஆனால் நானோ சிறிதும் பயப்படாமல் அந்தப் பூச்சியை சாப்பிட்டேன். அதைப் பார்த்து அவர் அசந்துவிட்டார். நீங்கள் பூச்சியைப் பார்த்து கத்தி, கூச்சல் போடுவீர்கள் என நினைத்தேன் என்று கூறி ஆச்சர்யப்பட்டார், என கூறியுள்ளார்.

பைனலுக்கு முன்னேறியது பெங்களூரு அணி: கெய்ல், கோஹ்லி அபாரம்

நியூ சவுத் வேல்ஸ் அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் கெய்ல், கோஹ்லி அபார ஆட்டத்தை வெளிப்படுத்த, பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறியது.

மூன்றாவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடக்கிறது. நேற்று பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடந்த முதலாவது அரையிறுதியில், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ், நியூ சவுத் வேல்ஸ் (ஆஸ்திரேலியா) அணிகள் மோதின. "டாஸ்' வென்ற பெங்களூரு அணி கேப்டன் வெட்டோரி, "பீல்டிங்' தேர்வு செய்தார்.

கைப் வாய்ப்பு:

பெங்களூரு அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டது. காயம் காரணமாக சுழற்பந்துவீச்சாளர் சையது முகமது நீக்கப்பட்டு, முகமது கைப் சேர்க்கப்பட்டார். நியூ சவுத் வேல்ஸ் அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

ஸ்மித் அபாரம்:

முதலில் பேட்டிங் செய்த நியூ சவுத் வேல்ஸ் அணிக்கு ஷேன் வாட்சன் (3) ஏமாற்றினார். பின் இணைந்த டேவிட் வார்னர், டேனியல் ஸ்மித் ஜோடி அதிரடியாக ரன் சேர்த்தது. பெங்களூரு பந்துவீச்சை பதம்பார்த்த வார்னர், "சிக்சர்' மழை பொழிந்தார். அபாரமாக ஆடிய வார்னர், 40வது பந்தில் அரைசதம் அடித்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த டேனியல் ஸ்மித், பட்கல் வீசிய ஆட்டத்தின் 14வது ஓவரில், ஒரு இமாலய "சிக்சர்' அடித்து தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 146 ரன்கள் சேர்த்த போது டேனியல் ஸ்மித் (62 ரன்கள், 42 பந்து, 3 சிக்சர், 7 பவுண்டரி), அரவிந்த் வேகத்தில் "போல்டானார்'.

வார்னர் சதம்:

தொடர்ந்து அதிரடி காட்டிய வார்னர், 62வது பந்தில் சதம் அடித்தார். அரவிந்த் வீசிய ஆட்டத்தின் கடைசி ஓவரில் இரண்டு "சிக்சர்', இரண்டு "பவுண்டரி' உட்பட 23 ரன்கள் எடுத்த வார்னர், அணியின் ஸ்கோரை வலுவாக்கினார். நியூ சவுத் வேல்ஸ் அணி, 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 203 ரன்கள் குவித்தது. அபாரமாக ஆடிய வார்னர், 68 பந்தில் 11 "சிக்சர்', 6 "பவுண்டரி' உட்பட 123 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். பெங்களூரு சார்பில் தில்ஷன், அரவிந்த் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

கெய்ல் அதிரடி:

சவாலான இலக்கை விரட்டிய பெங்களூரு அணிக்கு தில்ஷன் (4) ஏமாற்றினார். பின் இணைந்த கிறிஸ் கெய்ல், விராத் கோஹ்லி ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டது. நியூ சவுத் வேல்ஸ் பந்துவீச்சை வெளுத்துவாங்கிய கெய்ல், 20 பந்தில் அரைசதத்தை பதிவு செய்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த கோஹ்லி, தன்பங்கிற்கு அரைசதம் அடித்தார். கம்மின்ஸ் வீசிய ஆட்டத்தின் 14வது ஓவரில் ஒரு இமாலய "சிக்சர்' அடித்து பந்தை மைதானத்திற்கு வெளியே பறக்கவிட்ட கெய்ல் (92 ரன்கள், 41 பந்து, 8 சிக்சர், 8 பவுண்டரி) அதே ஓவரில் அவுட்டானார்.

கோஹ்லி நம்பிக்கை:

அடுத்து வந்த சவுரப் திவாரி (0), மயங்க் அகர்வால் (7) சோபிக்கவில்லை. தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கோஹ்லி, அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ஸ்டீவன் ஸ்மித் வீசிய ஆட்டத்தின் 19வது ஓவரில், தொடர்ந்து இரண்டு பவுண்டரி அடித்த கைப் (13*), அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். பெங்களூரு அணி 18.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 204 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கோஹ்லி (84 ரன்கள், 49 பந்து, 3 சிக்சர், 10 பவுண்டரி) அவுட்டாகாமல் இருந்தார். இதன்மூலம் பெங்களூரு அணி, முதன்முறையாக சாம்பியன்ஸ் லீக் தொடரின் பைனலுக்கு முன்னேறியது. ஆட்ட நாயகன் விருதை பெங்களூரு அணியின் கோஹ்லி பெற்றார்.

வார்னர் சாதனை

பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான அரையிறுதியில் 68 பந்தில் 123 எடுத்து அவுட்டாகாமல் இருந்த, நியூ சவுத் வேல்ஸ் அணியின் டேவிட் வார்னர், தொடர்ந்து இரண்டாவது சதம் அடித்தார். முன்னதாக இவர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் 69 பந்தில் 135 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். இதன்மூலம் "டுவென்டி-20' அரங்கில் அடுத்தடுத்து இரண்டு சதம் அடித்த முதல் வீரர் என்ற புதிய சாதனை படைத்தார்.

200வது "சிக்சர்'

மூன்றாவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடரின் 200வது சிக்சரை, பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியின் கிறிஸ் கெய்ல் அடித்தார். நேற்று நடந்த நியூ சவுத் வேல்ஸ் அணிக்கு எதிரான அரையிறுதியில், ஸ்டூவர்ட் கிளார்க் வீசிய ஆட்டத்தின் நான்காவது ஓவரின் 4வது பந்தில் ஒரு இமாலய "சிக்சர்' அடித்த கெய்ல், தொடரின் 200வது சிக்சரை பதிவு செய்தார்.
* தொடரின் முதல் சிக்சரை அடித்த பெருமை கிறிஸ் கெய்ல்லை சேரும். இதனை வாரியர்ஸ் அணிக்கு எதிராக அடித்தார். தொடரின் 100வது சிக்சரை மும்பை இந்தியன்ஸ் வீரர் போலார்டு, கேப் கோப்ராஸ் அணிக்கு எதிராக அடித்தார்.

மூன்று பெண்களுக்கு உலக அமைதிக்கான நோபல்

அமைதிக்கான நோபல் பரிசு, இந்தாண்டு மூன்று பெண்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இவர்களில் இருவர் ஆப்ரிக்காவின் மேற்குப் பகுதியில் உள்ள, லைபீரியா நாட்டவர். ஒருவர் ஏமன் நாட்டவர். நார்வே தலைநகர் ஆஸ்லோவில், இந்தாண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு, நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஆப்ரிக்க கண்டத்தின் மேற்குப் பகுதியில், அமைந்துள்ள லைபீரிய நாட்டின் அதிபர் எல்லன் ஜான்சன் சர்லீப், அந்நாட்டின் அமைதிப் போராளி லேமா போவீ மற்றும் ஏமன் நாட்டைச் சேர்ந்த தவாக்குல் கர்மான் ஆகிய மூன்று பேருக்கு, இப்பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது. இவர்களில் லைபீரிய நாட்டவரான லேமா போவீ, அந்நாட்டில் நடந்து வந்த, இரண்டாம் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் பெரும் பங்காற்றினார். அவரது அமைதி இயக்கம், உள்நாட்டுப் போரை 2003ல் முடிவுக்குக் கொண்டு வந்தது. அதன் பலனாக, அந்நாட்டில் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டு, அதிபராக எல்லன் ஜான்சன் சர்லீப், 72, என்ற பெண் தேர்ந்தெடுக்கப்பட்டார். லைபீரியாவிலும், ஆப்ரிக்காவிலும் முதன் முறையாக அதிபரான பெருமை சர்லீப்புக்குக் கிடைத்தது.

ஏமன் நாட்டில், தற்போது நடந்து வரும் அதிபருக்கு எதிரான ஜனநாயகப் போராட்டங்களின் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வருகிறார் தவாக்குல் கர்மான், 32. பத்திரிகையாளரான இவர், "உமன் ஜர்னலிஸ்ட்ஸ் வித்தவுட் செயின்ஸ்' என்ற மனித உரிமை அமைப்பை நடத்தி வருகிறார். இவரது தந்தை, சலேயின் ஆட்சியில், சட்ட அமைச்சராக இருந்தவர்.

நள்ளிரவில் நிர்வாணமாக ஓடிய பெண்-’பேய்’ என மக்கள் பீதி!

Written By Admin on Friday, 7 October 2011 | 10:18


சென்னை பல்லாவரம் மார்க்கெட் பகுதியில் நள்ளிரவில் இளம்பெண் ஒருவர் பொட்டுத் துணி கூட இல்லாமல் திடீரென நிர்வாணமாக ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பேய் என்று கூறி மக்கள் பீதியடைந்தனர்.
நேற்று பல்லாவரம் மார்க்கெட் பகுதியில் ஒரு இளம் பெண் உடைகளின்றி, தலைவிரி கோலமாக ஓடி வந்து கொண்டிருந்தார். இதைப் பார்த்து அந்தப் பகுதியில் அப்போது ரோந்து வந்து கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் கோவிந்த் உடனடியாக மகளிர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார்.
மகளிர் போலீஸார் போலீஸ் ஜீப்பில் விரைந்து வந்து அந்தப் பெண்ணைப் பிடித்து ஆடைகளை அணிவித்து பல்லாவரம் காவல் நிலையத்திற்குக் கூட்டிச் சென்றனர்.
அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் கூறுகையில், எனது சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம், தென்கல்பாக்கம் கிராமம் ஆகும். கடந்த 6 வருடமாக அதே பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரும், நானும் தீவிரமாக காதலித்து வந்தோம்.
10 மாதத்திற்கு முன்பு என்னை ஏமாற்றி விட்டு வேறொரு பெண்ணை ராமச்சந்திரன் திருமணம் செய்து கொண்டார். எனவே செய்யாறு போலீசில் இதுபற்றி அப்போது புகார் செய்தேன். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் நான் பெரும் மன உளைச்சலில் இருந்து வந்தேன். இதனால் எனது பெற்றோர் மன மாற்றத்துக்காக பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரில் உள்ள எனது மூத்த சகோதரி வீட்டிற்கு என்னை அனுப்பி வைத்தனர்.
ராமச்சந்திரன் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க என்ன செய்யலாம் என்று யோசித்தேன். வித்தியாசமாக எதையாவது செய்தால் போலீசார் கைது செய்து நம்மை விசாரிப்பார்கள். அப்போது நடந்ததை கூறி ராமச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்க செய்யலாம் என்று நினைத்தேன். இதற்காக நள்ளிரவு நிர்வாணமாக பொழிச்சலூரில் இருந்து பல்லாவரம் வரை நடந்து வந்தேன் என்றார் அவர்.
இதற்கிடையே, இந்தப் பெண் வந்த வழியெல்லாம் அவரைப் பார்த்த பொதுமக்கள் பேய் என நினைத்து ஓடி ஒளிந்ததும் தெரிய வந்துள்ளது.
அந்தப் பெண் சொல்வது உண்மையா அல்லது மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

மாணவருக்கு வயாக்ரா கொடுத்து செக்ஸுக்கு வற்புறுத்திய மெக்கானிக் மனைவி!


மதுரை மெக்கானிக் மனைவியை கொலை வழக்கில் கைதான, பக்கத்து வீட்டு கல்லூரி மாணவர், போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
மதுரை மாவட்டம் விரகனூர் அடுத்த கல்மேடு களஞ்சியம் நகரை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன். இவருக்கும், இவரது மனைவி முத்துலட்சுமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு எட்டயபுரத்தில் தனியே வசித்து மெக்கானிக் வேலை பார்த்து வருகிறார்.
முத்துலட்சுமி, தனது மகள் மற்றும் மகனுடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முத்துலட்சுமி வசித்து வந்த களஞ்சியம் நகர் வீட்டில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். சிலைமான் போலீசார் உடலை கைப்பற்றி, விசாரித்து வந்தனர்.
விசாரணையில் முத்துலட்சுமிக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த கல்லூரி மாணவர் முனீஸ்வரன் என்பவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்தது தெரிந்தது. மேலும் முனீஸ்வரனுக்கு இந்த கொலையில் தொடர்பு இருக்கலாம் என போலீசார் விசாரித்தனர். இதில் முத்துலட்சுமியை கொலை செய்ததாக முனீஸ்வரன் ஒப்புக் கொண்டார்.
இதுகுறித்து முனீஸ்வரன் போலீஸ் வாக்குமூலத்தில், “நான் அழகர்கோவில் சாலையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறேன். எனக்கும் முத்துலட்சுமிக்கும் இடையே கடந்த 8 மாதங்களுக்கு முன் பழக்கம் ஏற்பட்டது. முதலில் நண்பர்களாக பழகிய எங்களிடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டு, பின் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்தோம்.
முத்துலட்சுமியின் மகனும், மகளும் பள்ளிக்கு சென்றவுடன் என்னை அவரது வீட்டின் பின்புற கதவின் வழியாக தினமும் அழைப்பார். மாலையில் குழந்தைகள் பள்ளியில் வீடு திரும்பும் வரை உல்லாசமாக இருப்போம். இதனால் எனது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது.
ஒருகட்டத்தில் என்னால் அவருடன் செக்ஸ் உறவு கொள்ள முடியவில்லை. அதையடுத்து அவர் எனக்கு வாயக்ரா மாத்திரைகளை வாங்கி தந்து, அவருடன் தினமும் உறவு கொள்ள வற்புறுத்தினார். தினமும் அவருடன் உறவு கொண்டதில் எனக்கு நரம்பு தளர்ச்சியும், கல்லூரிக்கு செல்லும் ஆர்வமும் குறைந்தது.
ஒரு கட்டத்தில் கல்லூரிக்கு செல்வதை அடியோடு விட்டுவிட்டு முத்துலட்சுமியுடன் உறவு கொள்வதே கதி என இருந்துவிட்டேன். 2 பேரும் உல்லாசமாக இருக்க தேவையான பணத்திற்காக, கேபிள் டிவி வாடிக்கையாளர்களிடம் பணம் வசூலிக்கும் வேலைக்கு சென்றேன். அதில் கிடைத்த பணம் எல்லாவற்றையும் முத்துலட்சுமியிடமே கொடுத்தேன்.
இந்நிலையில் மொத்த வசூல் தொகையாக கிடைத்த 20,000 ரூபாயை அவரிடம் கொடுத்திருந்தேன். அதை திரும்ப கேட்ட போது, என்னிடம் தர மறுத்துவிட்டார். மேலும் அவரிடம் இத்தனை நாட்களாக உல்லாசமாக இருந்ததற்காக அது கழித்து கொள்வதாக கூறினார். 20,000 ரூபாய் பணபாக்கியை குறித்து கேபிள் டிவி உரிமையாளர் எனது பெற்றோரிடம் வந்து கூறிவிட்டனர்.
இதனால் எனது பெற்றோருக்கும் முத்துலட்சுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, சில நாட்கள் பேசாமல் இருந்தோம். அப்போது தரவேண்டிய பணத்தில் 12,500 ரூபாய் மட்டும் திரும்ப தந்தார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் என்னை முத்துலட்சுமி மீண்டும் அவரது வீட்டிற்கு அழைத்தார்.
அங்கு சென்றபோது என்னை உறவு கொள்ளுமாறு வற்புறுத்தினார். அப்போது பணம் கேட்டேன். அதற்கு என்னை அவர் தாக்கினார். நான் அவரை திரும்ப தாக்கி கொலை செய்தேன்”, என்றார்.
இளம் வயதில் தவறான உறவுகளில் சிக்கி வாழ்க்கையை இழந்த கல்லூரி மாணவன் முனீஸ்வரனை போலீசார் கைது செய்து, மேலும் விசாரித்து வருகின்றனர்.

மனைவியின் தலையை வெட்டியெடுத்து தெருவில் வந்த கணவர்


அசாம் மாநிலத்தில் மனைவி கள்ளத் தொடர்பு வைத்துள்ளாரோ என்ற சந்தேகத்தால் அவரின் தலையை வெட்டி, அதை ஊர்வலமாக எடுத்து வந்தவரை போலீசார் கைது செய்தனர்.
அசாம் மாநிலம் குவாஹாட்டியில் உள்ள ஜபோரிகாக் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் தாஸ். அவரது மனைவி அமியா தாய்மரி தாஸ். நர்ஸ். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்த அவர்களுக்கு விஷால் தாஸ் (8), அஷிம் தாஸ்(6) என்ற 2 மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் அமியா தாஸுக்கு கள்ளத் தொடர்பு இருக்கிறது என்று ரஞ்சித் தாஸுக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவர் தனது மனைவியின் தலையை துண்டாக வெட்டி, அதை எடுத்துக் கொண்டு தெரிவில் நடந்து வந்தார்.
அப்போது அந்த வழியாக ரோந்து வந்த மத்திய ரிசர்வ் படை போலீசார் தாஸைப் பிடித்துக் கொண்டு போய் டிஸ்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் நடந்தபோது இளைய மகன் அஷிம் வீட்டில் இருந்தான். தாய் கொல்லப்பட்டதில் இருந்து அவனைக் காணவில்லை. மூத்த மகன் விஷால் திருவிழா கொண்டாடுவதற்காக நல்பாரியில் உள்ள தாய்மாமன் வீட்டிற்கு சென்றுள்ளான்.
ரஞ்சித் தாஸ் வீட்டிற்குச் சென்ற போலீசார் அமியாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ரஞ்சித் தாஸிடம் தொடர்ந்து விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

நான் காந்தியின் கால் தூசுக்குக் கூட தகுதி பெறாதவன்- அன்னா


என்னை யாரும் காந்தியுடன் ஒப்பிட வேண்டாம். அவரது காலடியில் அமரக் கூட தகுதி இல்லாதவன் நான். காந்தியடிகளின் கொள்கைகளை பின்பற்ற மட்டுமே செய்கிறேன். அவருடன் என்னை ஒருபோதும் நான் இணைத்துப் பார்த்ததில்லை என்று கூறியுள்ளார் அன்னா ஹஸாரே.
அன்னா ஹஸாரே இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
என்னை காந்தியுடன் ஒப்பிடுவது நியாயமற்றது. நான் காந்தியடிகளின் காலடியில் அமரக் கூட தகுதி இல்லாதவன். அவரது கொள்கைகளை நான் பின்பற்ற முயற்சிக்கிறேன்.
நான் மிரட்டி காரியம் சாதிப்பதாக கூறுவதில் உண்மை. நான் யாரையும் பிளாகமெயில் செய்யவில்லை. நான் என்ன பணமா கேட்கிறேன். அவர்கள் அரசியல்சாசன சட்டத்தை மறந்து விட்டனர். 1950களில் இந்த நாட்டின் உரிமையாளர்களாக மக்கள் இருந்தனர். ஆனால் எல்லோராலும் நாடாளுமன்றத்திற்குள் போக முடியாது என்பதால் அரசியல்வாதிகளை எம்.பிக்களாக தேர்வு செய்து அனுப்பி வைத்தனர். நாட்டைப் பாதுகாப்பார்கள், நாட்டின் சொத்துக்களை பாதுகாப்பார்கள் என்ற நம்பிக்கையில்தான் இதைச் செய்தோம். அப்படிப்பட்ட எம்.பிக்கள், நாட்டுக்கு உதவும் வகையிலான நல்ல சட்டங்களை இயற்றாமல் போனால் எப்படி? மக்களுக்குத் தேவையானதைச் செய்யுங்கள் என்று கூறினால் பிளாகமெயில் என்பதா. போராட்டம் நடத்துவது நிச்சயம் பிளாக்மெயில் ஆகாது.
நான் காலையில் 5 மணிக்கு எழுந்திருக்கிறேன். ஒன்றரை மணி நேரம் யோகாசனம், பிராணயாமா, தியானம் ஆகியவற்றை செய்கிறேன். எட்டரை மணிக்கு என்னைப் பார்க்க மக்கள் வருகிறார்கள். மாலை வரை இப்படியே ஓடி விடும். இடையில் கடிதம் எழுத நேரம் எடுத்துக் கொள்கிறேன். இரவு 10 மணிக்குத் தூங்கப் போகிறேன்.
நான் ரொட்டியும் காய்கறியும்தான் சாப்பிடுகிறேன். ஒரு நாளைக்கு ஒரு வேளைதான் சாப்பிடுவேன். காலையில் பால் சாப்பிடுவேன். மாலையில் ஜூஸ் ஏதாவது சாப்பிடுவேன்.
எனக்கென்று எந்த இலக்கும், கொள்கையும் இல்லை. சுயநலமற்ற வகையில் கடைசி வரை செயல்படவே விரும்புகிறேன்.
நான் பிரதமர் பதவிக்கெல்லாம் சற்றும் பொருந்த மாட்டேன். அரசியலில் புகும் ஆர்வமும் இல்லை. அது எனக்கு ஒத்துவராது.
எனது குழுவில் உள்ள சிலருக்குள் ஈகோ பிரச்சினை இருப்பது உண்மைதான். அவர்களை மாற்ற நான் முயற்சித்து வருகிறேன். இது சாதாரணமானதுதான். எங்களிடம் உள்ள இதே குறைகளைப் போல அரசிடமும் உள்ளது. கபில் சிபலும், ப.சிதம்பரத்தையும் உதாரணமாக கூறலாம். எல்லா இடங்களிலும் இது உள்ளதுதான். எனது குழுவில் உள்ள அனைவருமே நல்லவர்கள் என்பதுதான் முக்கியமாக பார்க்கப்பட வேண்டும். அவர்களிடம் உள்ள குறைகளை நான் களைந்து வருகிறேன். அவர்கள் மாறுவார்கள் என்றார் அன்னா.

‘ரா ஒன்’….


முன்பெல்லாம் தமிழகம் முழுக்க 20 திரையரங்கில் ஒரு இந்திப் படம் வெளியானாலே பெரிய சாதனை. சென்னையில் மூன்று அரங்குகளில் வெளியாகும். இப்போது நிலைமை வேறு.
தமிழ்ப் படங்களுக்கு இணையாக இந்திப் படங்களும் அதிக திரையரங்குகளில் வெளியாகின்றன. அதுவும் ரஜினி நடித்துள்ளார் என்றால் கேட்க வேண்டுமா… கிட்டத்தட்ட 20 க்கும் மேற்பட்ட அரங்குகளில் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வெளியாகிறது ரா ஒன். இந்தியில் மட்டுமல்லாது, தமிழிலும் ‘டப்பாகி’ இந்தப் படம் வெளியாவதால் தியேட்டர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்தனர்.
தீபாவளிப் படங்களில் இப்போதைக்கு ஏழாம் அறிவு மட்டுமே வெளியாவது உறுதியாகியுள்ளது. இப்போதைக்கு ரா ஒன்னுக்கு தீபாவளிப் போட்டி ஏ ஆர் முருகதாஸின் இந்த நேரடி தமிழ்ப் படம்தான்!
ஒஸ்தி வரலாமா வேண்டாமா என தயங்கி நிற்கிறது. ரா ஒன்னுக்கு நல்ல திரையரங்குகள் பெருமளவு ஒதுக்கப்பட்டுள்ளதால் இந்தப் படம் வெளிவராது என்றே தெரிகிறது.
தீபாவளிக்கு ஒரு நாள் முன்பாக கட்டாயம் ரிலீசாகிவிடும் என்று சொல்லப்பட்ட விஜய்யின் வேலாயுதம் படத்துக்கு இன்னமும் நல்ல அரங்குகள் கிடைக்கவில்லை என்கிறார்கள். இதனால் அந்தப் படம் குறித்த தேதியில் வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், சொன்னபடி வெளியாகும் வேலாயுதம் என தயாரிப்பாளர் தரப்பில் உறுதியாக உள்ளனர்.
மயக்கம் என்ன படம் ஏற்கெனவே ரேஸிலிருந்து விலகிக் கொண்டது நினைவிருக்கலாம்.

பட்டியல் தர கமிஷனர் உத்தரவு இன்டர்நெட் மையத்திற்கு வருபவர்கள் யார் யார்?

Written By Admin on Wednesday, 5 October 2011 | 10:59

சென்னை : இன்டர்நெட் மையத்திற்கு வருபவர்கள் யார்&யார் என்பது பற்றி மாதந்தோறும் 5ம் தேதி போலீஸ் நிலையத்தில் பட்டியல் கொடுக்க வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் உள்ள இன்டர்நெட் மையங்களில் அதிரடியாக சோதனை நடத்தியதில் பல மையங்களில் வருகை பதிவு செய்யப்படவில்லை, கண்காணிப்பு கேமராக்கள் இல்லை என்பது தெரியவந்தது. 

இதையடுத்து இன்டர்நெட் மையங்கள் மூலம் பல குற்றங்கள் நடைபெற வாய்ப்புகள் இருப்பதால், அதை தடுப்பது குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் எழும்பூரில் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இன்டர்நெட் மையங்களின் உரிமையாளர்கள், மேலாளர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 
பாதுகாப்பு முறைகள் குறித்து கமிஷனர் திரிபாதி பேசியதாவது:

அனைத்து மையங்களிலும் கண்டிப்பாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். இல்லையென்றால் லைசென்ஸ் ரத்து செய்யப்படும். யார் யார் வந்து செல்கிறார்கள், என்னென்ன செய்கிறார்கள் என்பது பற்றிய விவரங்கள் அனைத்தையும் சேகரித்து வைக்க வேண்டும். அதனை மாதந்தோறும் 5ம் தேதி போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும். குற்றங்கள் நிகழ்ந்தால் அந்த மையத்தின் உரிமையாளர்தான் பொறுப்பு. அதனால் பாதுகாப்பு விஷயத்தில் மிகவும் கவனமாக இருங்கள்.

மாமூல் தொல்லை தாங்க முடியவில்லை

கூடுதல் கமிஷனர் அபய்குமார் சிங் பேசும்போது சிலர் எழுந்து, “மாதந்தோறும் எங்கள் பகுதி இன்ஸ்பெக்டர்கள், சோதனை என்ற பெயரில் மாமூல் கேட்டு தொந்தரவு செய்கிறார்கள். முறையான ஆவணங்கள், பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்திருந்தாலும், அவர்களது தொல்லை பெரும் தொல்லையாக இருக்கிறது’’ என்று குற்றம் சாட்டினர். உடனே அபய்குமார் சிங், அப்படி செய்யும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இன்டர்நெட் மைய நிர்வாகிகள் கூறுகையில், “தவறு நடக்கும் மையத்தை போலீஸ் தான் கண்டுபிடிக்க வேண்டும். அதைவிடுத்து மாதந்தோறும் பட்டியல் கொடுப்பது என்பது முடியாத காரியம். இமெயில் முகவரி கொடுத்தால் பட்டியலை அனுப்பி விடுவோம்’’ என்றனர்.

செல்போன் வரவால் களையிழந்த எஸ்டிடி பூத்களுக்கு மறுவாழ்வு


மதுரை, திண்டுக்கல், தூத்துக்குடி உட்பட மதுரை ரயில்வே கோட்டத்தில் உளள 105 ரயில் நிலையங்களில் 116 எஸ்டிடி பூத்கள் அமைக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. செல்போன்களின் சிக்னல் பிரச்னை தொடர்வதால், சாதாரண தொலைபேசிகளுக்கு இன்னும் வரவேற்பு இருக்கிறது. அதனால் அங்கொன்று இங்கொன்றுமாய் இன்னும் எஸ்டிடி பூத்கள் மிச்சமிருக்கின்றன. பொது மக்கள் கூடும் இடங்களில் ஒன்றான ரயில் நிலையங்களிலும் எஸ்டிடி பூத்கள் இருக்கின்றன.

இதன்தொடர்ச்சியாக மதுரை கோட்டங்களில் உள்ள 105 ரயில் நிலையங்களில் 116  எஸ்டிடி பூத்கள் அமைக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. மதுரை ரயில் நிலையத்தில் 2 முதல் 7 நடைமேடைகளில் 6 எஸ்டிடி பூத்கள் அமைக்கப்பட உள்ளளன. பூத் ஒன்றுக்கு மாதம் 28,989 ரூபாய் வாடகை. இதேபோல் திருநெல்வேலியில் 3, திண்டுக்கல்லில் 2, விருதுநகரில் 2, கோவில்பட்டியில் 2, தூத்துக்குடி, தென்காசியில் தலா ஒரு எஸ்டிடி பூத்கள் அமைய உள்ளன. இவற்றுக்கு மாதம் தலா ^6,600 வாடகை. 

இவை தவிர கடையநல்லூர், மானாமதுரை, புதுக்கோட்டை, பழனி, பரமகுடி, தேனி, உடுமலைப்பேட்டை, திருமங்கலம், கொடை ரோடு ஆகிய 10 ரயில் நிலையங்களில் தலா ஒரு எஸ்டிடி பூத் அமைக்கப்படும். வாடகை மாதம் ரூ.6000. இதேபோல் அக்கரைப்பட்டி, கோட்டையூர், மணப்பாறை, சாத்தூர் உட்பட 77 ரயில் நிலையங்களில் தலா ஒரு எஸ்டிடி பூத் வைக்க அனுமதிக்கப்படும். இவற்றுக்கு மாதம் 3000 ரூபாய் வாடகை.

மேலும் மண்டபம் கேம்ப், மடத்துக்குளம், சங்கரன்கோவில் உட்பட 12 ரயில் நிலையங்களில் தலா ஒரு எஸ்டிடி பூத் அமைக்கப்படும். வாடகை மாதம் ^1000.
குத்தகை காலங்கள் 5 ஆண்டுகள். தினமும் வந்துச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ரயில் நிலையங்களின் தரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாடகை தவிர வைப்புத் தொகையாக ^10,000 கட்ட வேணடும். எஸ்டிடி பூத்தில் பிசிஓ, எஸ்டிடி, ஃபேக்ஸ் வசதி இருக்கும். 

இவற்றில் செல்போன் ரீசார்ஜ் கூப்பன்கள் விற்பனை செய்ய மாதந்தோறும் வாடகையுடன் கூடுதலாக ^500 செலுத்த வேணடும். ஒவ்வொரு பூத்தும் 5 அடி அகலம், 6 அடி நீளம் கொண்டவையாக இருக்கும். மாத வாடகை ஒவ்வொரு ஆண்டும் 10 சதவீதம் அதிகரிக்கப்படும்.

இந்த பூத்கள் பெண்கள், பிற்படுத்தப்பட்டவர், தாழ்த்தப்பட்டவர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு இடஒதுக்கீடு அடிப்படையில் அமைக்கப்படும். எஸ்டிடி பூத் அமைக்க விரும்புபவர்கள் 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பெண்கள், தாழ்த்தப்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு விதிவிலக்கு உண்டு. ஆனால் இவர்கள் வேறு வேலைவாய்ப்பு இல்லாதவர்களாக இருக்க வேண்டும். இம்மாதத்திற்குள் ஆட்களை தேர்வு செய்வதற்கான பணிகளில் மதுரை ரயில்வே கோட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

குடிமகன்கள் அதிர்ச்சி புதுவை மதுக்கடைகளில் சரக்கு விலை உயர்ந்தது


புதுவையில் பாப்ஸ்கோ மதுபானக்கடையில் சரக்குகளின் விலை ^2 முதல் 30 வரை உயர்ந்துள்ளதால் குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பிறமாநிலங்களை விட புதுச்சேரி மாநிலத்தில் மதுபானங்கள் விலை குறைவு. இதனால் இங்கு சரக்கு அதிகளவில் விற்பனையாகும். தமிழக பகுதிகளில் இருந்து ஏராளமானோர் இங்கு வந்து குடித்து விட்டு செல்கிறார்கள். இந்நிலையில் சமீபகாலமாக இங்குள்ள கடையிலும் மதுபானங்களின் விலை தாறுமாறாக உயர்த்தப்பட்டுள்ளது. கலால்துறை ஆணையரும், கலெக்டருமான தீபக்குமார் உத்தரவுபடி தற்போது மதுபான உற்பத்தியாளர்கள் மதுபாட்டில்களில் அதிகபட்ச சில்லறை விலையை அச்சிட்டுள்ளனர். 

அதன்படி ஒவ்வொரு கடையிலும் அதிகபட்ச சில்லறை விலைக்கு (எம்ஆர்பி) மதுபானங்களை விற்பனை செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஒவ்வொரு கடையிலும் பழைய இருப்பு இருந்ததால், அக்டோபர் மாதம் வரை பழைய விலைக்கு விற்பனை செய்து கொள்ளலாம், அதற்கு பிறகு அதிகபட்ச சில்லறை விலைக்கு மதுவை விற்பனை செய்ய வேண்டும் எனவும் கலால்துறை துணை ஆணையர் அன்பழகன் அறிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து அரசு நிறுவனமான பாப்ஸ்கோ மதுபானக்கடையில் இந்த மாதம் முதல் அதிக பட்ச சில்லறை விலையுடன் மதுபானங்கள் விற்கப்பட்டு வருகின்றன. இதனால் மதுபானங்களின் விலை ரகங்களுக்கேற்ப குறைந்தபட்சம் ^2ல் இருந்து அதிகபட்சமாக ^30 வரை உயர்ந்துள்ளது. இதற்கான அறிவிப்பும் பாப்ஸ்கோ மதுபான கடைகளின் வெளியில் ஒட்டப்பட்டுள்ளது. 

எண்ணெய் ஆலையில் காஸ் குழாய் வெடித்து குவைத்தில் 4 தமிழர் பலி


குவைத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் காஸ் குழாய் வெடித்து விபத்து ஏற்பட்டதில் 4 தமிழர்கள் பரிதாபமாக பலியாயினர்.
குவைத்தில் உள்ள 3 பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் மினா அல்அகமதி ஆலையும் ஒன்று. நாள் ஒன்றுக்கு 4.6 லட்சம் பேரல் எண்ணெய் சுத்திகரிக்கும் திறன் கொண்ட இந்த ஆலையில் கடந்த வாரம் பராமரிப்பு பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது அங்குள்ள காஸ் குழாய் வெடித்து விபத்து ஏற்பட்டது. அதில் சிக்கி உடல் கருகி 4 பேர் பரிதாபமாக பலியாயினர். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர். இந்நிலையில் மினா ஆலையில் உயிரிழந்தவர்கள் 4 பேரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டது. அவர்கள் ராஜாராம் லட்சுமையாரெட்டி, லோகாநாதன் பொன்னையா செந்திவேல், ஜானகிராம் அர்ஜூனன் மற்றும் சிவசந்திரன் சண்முகம் என்பதையும் இந்திய தூதரகம் உறுதிபடுத்தியுள்ளது.

மேலும் இறந்தவர்களுக்கு முறையாக இறுதிச் சடங்கு நடத்துவ தற்காக இந்தியா அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர். மினா ஆலையின் காஸ் குழாயில் ஏற்பட்ட கசிவால் இந்த விபத்து நடந்துள்ளது. அப்போது அருகில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த 4 பேர் பலியாயினர். விபத்துக்குப்பின் ஆலையில் வழக்கம்போல் பணிகள் தொடர்ந்து நடப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

மீண்டும் அச்சத்தில் மக்கள் இன்னொரு செயற்கைகோள் பூமியை நோக்கி பாய்கிறது


செயலிழந்த மற்றொரு செயற்கைக்கோள் பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். அமெரிக்க விண்வெளி மையத்தால் அனுப்பி வைக்கப்பட்டு செயலிழந்த யுஏஆர்எஸ் செயற்கைக் கோள் 26 துண்டுகளாக உடைந்து பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாக கடந்த சில வாரங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இது மனிதர்கள் மீது விழலாம் என எச்சரிக்கப்பட்டது. இதனால் மக்கள் பீதியில் இருந்த நிலையில் கடல் பகுதியில் விழுந்ததால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. 

இந்நிலையில் Ôரோசாட்Õ என்ற மற்றொரு செயற்கைக்கோள் பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும், 30 துண்டுகளாக உடைந்து பூமியில் விழும்போது மனிதர்கள் மீது விழ 2000ல் ஒரு பங்கு வாய்ப்பு இருப்பதாகவும் ஜெர்மனி விண்வெளி ஆய்வு மைய விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அண்மையில் கடலில் விழுந்த யுஏஆர்எஸ் செயற்கைக்கோள் 3,200ல் ஒரு பங்கு மட்டுமே மனிதர்கள் மீது விழ வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ரோசாட் செயற்கைக்கோள், ஜெர்மனி, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளின் கூட்டு முயற்சியில் கடந்த 1990ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி அமெரிக்காவால் விண்ணுக்கு ஏவப்பட்டது. இதன் பணி 1999ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி முடிவடைந்தது இதையடுத்து, செயலிழக்க வைக்கப்பட்ட இது பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.

3 அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு


 இயற்பியலில் சிறந்து விளங்குவதற்கான இந்த ஆண்டின் நோபல் பரிசை அமெரிக்காவை சேர்ந்த 3 விஞ்ஞானிகள் பெறுகின்றனர்.
இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு வென்றவர்களின் பட்டியலை சுவீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் ராயல் ஸ்வீடிஷ் அகாடமி வெளியிட்டு வருகிறது. நேற்று முன்தினம் மருத்துவ துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டது.

இயற்பியலுக்கான பரிசுக்குரியவர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர். அமெரிக்காவில் பிறந்த சால் பெர்ல்மட்டர், பிரையன் ஷெமிட், ஆடம் ரீஸ் ஆகிய மூவர் இந்த பரிசை வென்றுள்ளனர். தொலைதூர ஒளிரும் நட்சத்திரத்தை கண்டறிந்ததன் மூலம் பிரபஞ்சத்தின் அளவை அதிகரிக்கும் கண்டுபிடிப்புக்கு உதவியதற்காக இவர்கள் நோபல் பரிசு பெறுகின்றனர்.

வெடித்து சிதறும் நட்சத்திரங்கள், திடீரென பிரகாசமாக ஒளிரும் நட்சத்திரங்களை (சூப்பர்நோவா) ஆய்வு செய்ததன் மூலம் உலக பிரபஞ்ச வரைபடத்தை விரிவாக்கம் செய்வதில் இவர்கள் தீவிரம் காட்டுகின்றனர். அதற்காக 1990 முதல் தனித்தனியாகவும் கூட்டாகவும் ஆராய்ச்சிகள் நடத்தினர். வளி மண்டலத்தில் 50 சூப்பர்நோவாக்கள் வெளியிட்ட ஒளி, எதிர்பார்த்ததைவிட குறைந்த சக்தியுடன் இருந்தது. இது பிரபஞ்சத்தின் விரிவாக்க வேகம் அதிகரித்திருப்பதை காட்டுவதாக இவர்கள் தெரிவித்தனர்.

இந்த ஆராய்ச்சிக்காக பெர்ல்மட்டர் (52), ஷெமிட் (44), ரீஸ் (41) ஆகிய மூவரும் நோபல் பரிசுத் தொகையான ஸி7.35 கோடியை சமமாக பகிர்ந்து கொள்வார்கள். இவர்களுக்கு டிசம்பர் 10ம் தேதி நடைபெற உள்ள விழாவில் நோபல் பரிசு வழங்கப்படும். இன்று வேதியலுக்கான நோபல் பரிசும், நாளை இலக்கியத்துக்கான பரிசும் அறிவிக்கப்பட உள்ளது.

Health