Make Money

World News

Entertainment

Advertise

Blog Archive

ஒரு நிஜ ஹீரோ

Written By Admin on Wednesday, 28 September 2011 | 23:35

‘டைகர்’ மன்சூர் அலிகான் பட்டோடி. இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன். கங்குலி, டோனி பிறப்பதற்கு முன்பாகவே. வெளிநாட்டிலும் நம்மால் வெல்ல முடியும் என்ற நம்பிக்கையை நம் வீரர்களின் மனதில் விதைத்தவர். மன்னர் பரம்பரையில் பிறந்தவர் என்பதாலோ, அப்பா இப்திகார் இங்கிலாந்துக்கும், இந்தியாவுக்கும் விளையாடியவர் என்பதாலோ அல்லாமல் திறமையால் சாதித்தவர். கார் விபத்தில் ஒரு கண் பார்வையை இழந்த பிறகும், மனம் தளராமல் களமிறங்கி கலக்கியவர்.

மிக இளம் வயதில் (21) கேப்டன் பதவி இவரை தேடி வந்ததற்கும் ஒரு காயம்தான் காரணம். பார்படாஸ் டெஸ்டில் கிரிபித் வீசிய பவுன்சரில் கேப்டன் கான்ட்ராக்டர் மண்டை உடைய, பட்டோடி தலையில் பொறுப்பு சுமத்தப்பட்டது. கொஞ்சமும் அசராமல், தனது தனித்துவமான செயல்பாட்டால் கேப்டனாக தனி முத்திரை பதித்தார். சக வீரர்களுக்கிடையே எந்த வித சர்ச்சைக்கும் இடம் கொடுக்காதவர். 

ஒரு போட்டியில், வெஸ்ட் இண்டீசின் ஆண்டி ராபர்ட்ஸ் வேகம் இவரது தாடையை பதம் பார்க்க, அடுத்து ஹோல்டர் வீசிய ஓவரில் அனாயசமாக சிக்சர் விளாசியதை கிரிக்கெட் பிரபலங்கள் இன்றும் பிரமிப்புடன் நினைவுகூர்கிறார்கள். அத்தனை மன உறுதி. பேட்டிங்கில் மட்டுமல்ல, பந்தை பாய்ந்து தடுப்பதிலும் கில்லாடி. அதற்காக கிடைத்ததுதான் டைகர் பட்டம். 

சேப்பாக்கம் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 128 ரன் விளாசிய ஆட்டம் ரொம்பவே ஸ்பெஷல் என்று அவரே சொல்லியிருக்கிறார். களத்திற்கு உள்ளே மட்டுமல்ல வெளியேயும் ஹீரோவாக ஜொலித்தவர். ரேமண்ட்ஸ் விளம்பரத்தில் இவரை யார் என்றே தெரியாதவர்கள் கூட, அவரது மிடுக்கான தோற்றத்திலும் நடையிலும் மனதை பறிகொடுத்ததை மறுக்க முடியுமா? 70களில் ரசிகைகளை அதிகம் கவர்ந்த கிரிக்கெட் வீரர் இவர்தான். கிரிக்கெட்டின் முதல் ஸ்டைல் மன்னன். இவரது ஆட்டத்திலும் அழகிலும் மயங்கி கை பிடித்தவர்தான் பாலிவுட் கனவுக் கன்னி ஷர்மிளா தாகூர்.

வர்ணனையாளர், நடுவர், சிறந்த நிர்வாகி என்று பன்முகத் திறன் காட்டி பலருக்கும் முன்னோடியாக விளங்கியவர். அரசியலில் அடி சறுக்கினாலும், ரசிகர்களுக்கு என்றுமே நவாப்தான். அவரது மறைவு கிரிக்கெட் உலகில் இட்டு நிரப்ப முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

மீண்டும் இந்தியா

நல்ல வேலை, சூப்பர் சம்பளம் என அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளுக்கு போனவர்கள், தாயகம் திரும்புகிறார்கள். மோசமான பொருளாதார நிலையால் அந்த நாடுகளில் வேலையிழப்பு ஏற்பட்டு வருகிறது. அதோடு சம்பளமும் குறைந்து வருகிறது. இதனால் போதும் வெளிநாட்டு வேலை என உதறிவிட்டு இந்தியா திரும¢புகிறார்கள் என தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

டாக்டர்கள், இன்ஜினியர்கள், சாப்ட்வேர் நிபுணர்கள், விஞ்ஞானிகள் என கூட்டம் கூட்டமாக, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், ஜெர்மனி என வெளிநாட்டு வேலைக்கு படையெடுத்தது ஒரு காலம். அவர்கள் அங்கேயே செட்டிலாகி அடுத்த தலைமுறையினர், அந்த நாட்டு குடிமகன்களாகவே மாறிவிட்டனர். அவர்களுக்கும் அடுத்தடுத்து வெளிநாடு போனவர்களுக்கும் இப்போது பிரச்னை. காரணம் அந்த நாடுகளின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட சரிவு. இதனால் வெளிநாட்டு நிறுவனங்கள் ஆட்குறைப்பில் இறங்கியுள்ளன. 

100 பேர் வேலை பார்த்த இடத்தில் 50 பேர் இருந்தால் போதும் என்ற நிலை. ஆட்குறைப்பில் சிக்கிய வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்தியா திரும்பத் தொடங்கியுள்ளனர். இப்படி திரும்பும் நிபுணர்களுக்கு இந்திய நிறுவனங்கள் நல்ல சம்பளம் கொடுத்து சேர்த்துக் கொள்கின்றன. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சிறப்பான வேலை வாய்ப்புகளை அளித்து வருகிறது. அதோடு வெளிநாட்டு சம்பளத்துக்கும் இங்கு கிடைக்கும் சம்பளத்துக்கும் உள்ள இடைவெளியும் பெரிதும் குறைந்துள்ளது. இதுவும் என்ஆர்ஐக்கள் இந்தியா திரும்ப முக்கிய காரணம் என்கிறது ஆய்வு.

ஐ.டி. ஊழியர்களும், இன்ஜினியரிங், வங்கித் துறை, நிதித்துறை, டெலிகாம் துறை, ஆட்டோமொபைல் துறை ஊழியர்களும் அதிகம் தாயகம் திரும்புகின்றனர். இவர்களை இந்திய நிறுவனங்கள் வேலைக்கு அமர்த்துவது 9 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இவர்களில் பலர் கிளைமேட் காரணமாக பெங்களூரில் செட்டிலாவதைத்தான் விரும்புகிறார்களாம். மும்பை, டெல்லி, ஹைதராபாத் அவர்களின் அடுத்தடுத்த சாய்ஸ். வெளிநாடுகளில் சம்பளம் அதிகம் இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் அதிகம். இந்தியாவில் சம்பளம் கொஞ்சம் குறைவாக இருந்தாலும் செலவு மிகவும் குறைவு என்பதால் சம்பள வித்தியாசத்தை பொருட்படுத்துவதில்லை என்கிறது சர்வே.

படித்தது போதும்

தேர்வு நேரத்தில் மாணவர்களை விட அதிகம் டென்ஷனாவது பெற்றோர்தான். காரணம் மார்க். இதனாலேயே விளையாட்டு என்பது பள்ளிக் குழந்தைகளின் வாழ்க்கையில் இருந்து முற்றிலுமாக விலகி போய் விட்டது. பள்ளிகளில் கிரேடு முறை அறிவித்ததன் மூலம் மீண்டும் குழந்தைகள் விளையாட்டை சந்தோஷமாக அனுபவிக்க போகிறார்கள்.
சிபிஎஸ்இ பள்ளிகளில் மார்க் கிடையாது. 

கிரேடுதான் கடைப்பிடிக்கப்படுகிறது. சமச்சீர் கல்வியை அடுத்து தமிழக பள்ளிகளில் அதிரடியாக இந்த கிரேடு சிஸ்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. கிரேடு முறையில் மொத்தம் 60 மார்க்தான் தேர்வுக்கு. மீதி 40 மார்க் மாணவர்களின் பல்வேறு திறமைகளை மதிப்பிட்டு வழங்குவது. அடுத்த கல்வியாண்டில் இருந்து 1 முதல் 8 வகுப்புகளுக்கும் அடுத்ததாக 9, 10ம் வகுப்புகளுக்கும் புதிய முறை கொண்டு வரப்படுகிறது. 10, 12ம் வகுப்புகளுக்கு அரசு தேர்வு முறையும் ஒழியப் போகிறது. இதனால் இந்த இரண்டு வகுப்போடு படிப்புக்கு முழுக்குப்போடும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறையப் போகிறது.

இதுவரை படிப்பு மட்டும் இருந்தால் போதும். இனி அப்படி கிடையாது. உடற்கல்வி, நாட்டுப்புறக் கலை, யோகா, தோட்டக்கலை, ஜிம்னாஸ்டிக்ஸ், வேலை அனுபவம், போட்டோகிராபி, கராத்தே, நாடகம், நடனம், பாட்டு, ஸ்கவுட், என்எஸ்எஸ், என்சிசி, கேரம், செஸ், டேபிள் டென்னிஸ் போன்ற விளையாட்டுகள், கபடி, புட்பால், பேஸ்கட் பால், கிரிக்கெட், கிராப்ட் திறன் என பல விஷயங்களை மாணவர்கள் கற்றுக் கொள்ளப் போகிறார்கள். 

காரணம் அதற்கும் மார்க் உண்டு. மார்க் உண்டு என்றால் மலை மீது கூட ஏறத் தயங்க மாட்டார்கள் என்பதால் கண்டிப்பாக அத்தனை புது விஷயங்களும் குழந்தைகளுக்கு கிடைக்கப் போகிறது. படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த மாணவர்களுக்கு, இனி பள்ளி படிப்பு வித்தியாசமான அனுபவமாக மாறப்போகிறது.

கடந்த 2009ம் ஆண்டில் சிபிஎஸ்இ பள்ளிகளில் கிரேடு சிஸ்டம் கொண்டு வரப்பட்டது. அதுமுதல் படிக்கும் நேரம் குறைந்து மற்ற திறன்களை வளர்த்து கொள்வதற்கும் வாய்ப்பு ஏற்பட்டது. சமச்சீர் கல்வியும் அதைத் தொடர்ந்து கொண்டு வரப்பட்டுள்ள கிரேடு முறையும் கல்வி முறையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள் கல்வியாளர்கள்.

ஆஸ்திரேலிய அணியில் ஜான்சன் அதிரடி நீக்கம்

தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ள ஆஸ்திரேலிய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. டி20 தொடருக்கான (2 போட்டி) அணியில் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். ஒருநாள் தொடருக்கான அணியில் (3 போட்டி) பேட்ஸ்மேன் டேவிட் ஹஸி தேர்வு செய்யப்படவில்லை.

முதல் டி20 கேப் டவுனில் அக். 13ம் தேதியும், 2வது டி20 அக்.16ல் ஜோகன்னஸ்பர்கிலும் நடக்க உள்ளன. டெஸ்ட் தொடருக்கான அணி (2 போட்டி) பின்னர் தேர்வு செய்யப்பட உள்ளது. ஒருநாள் அணி: மைக்கேல் கிளார்க் (கேப்டன்), ஷேன் வாட்சன், டேவிட் வார்னர், ஷான் மார்ஷ், ரிக்கி பான்டிங், மைக்கேல் ஹஸி, பிராட் ஹாடின் (விக்கெட் கீப்பர்), ஸ்டீவன் ஸ்மித், மிட்செல் ஜான்சன், பிரெட் லீ, சேவியர் டோஹர்டி, ஜேம்ஸ் பேட்டின்சன், பேட்ரிக் கம்மின்ஸ், டக் போலிஞ்சர்.

டி20 அணி: கேமரான் ஒயிட் (கேப்டன்), ஷேன் வாட்சன், டேவிட் வார்னர், ஷான் மார்ஷ், மிட்செல் மார்ஷ், ஆரோன் பிஞ்ச், டேவிட் ஹஸி, மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), ஸ்டீவன் ஸ்மித், ஸ்டீவ் ஓ கீப், பிரெட் லீ, ஜேம்ஸ் பேட்டின்சன், பேட்ரிக் கம்மின்ஸ், டக் போலிஞ்சர்.

மயக்க மருந்து கொடுக்காமல் ஆபரேஷன்!


வாஷிங்டன் : மருத்துவ உலகில் சாதனைகள் தொடர்கதையாக இருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒரு சாதனை படைக்கப்படுகிறது. அந்த வரிசையில் இப்போது மயக்க மருந்து கொடுக்காமல் ஆபரேஷன் மேற்கொள்வது குறித்த ஆய்வில் வெற்றி கிட்டியுள்ளது. நோயாளிகளை இயல்பு நிலையில் வைத்து, அவர்களின் சிந்தனைகளை சிதறடித்து கவனத்தை மாற்றி ஆபரேஷன் செய்யும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. பரிசோதனை அடிப்படையில் வெற்றி கிடைத்துள்ளது என்கின்றனர் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள். பெரும்பாலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த முறை பெரிதும் உதவும் என்பதும் மருத்துவ தரப்பின் கணிப்பு. இந்த முறை விர்சுவல் ரியாலிட்டி தெரபி எனப்படும். 

அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் புதிய கண்டுபிடிப்பு இது. புதிய முறை குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது:
இந்த முறையில் நோயாளிகளின் முகத்தில், கண்கள் விளையாட்டை மட்டுமே பார்க்கக் கூடிய வகையில் மாஸ்க் போன்ற சாதனம் பொருத்தப்படும். வீடியோ கேம் விளையாடத் தெரியாதவர்களும் இதை எளிதாக கையாள முடியும். இதன் மவுஸ் அவர்கள் கைகளில் இருக்கும். முதலில் அவர்கள் கவனம் முழுவதும் விளையாட்டில் செலுத்தப்படும். ஒரு கட்டத்தில் அவர்கள் விளையாட்டில் ஊன்றிவிடுவர். ஸ்னோ வேர்ல்ட் என்ற பெயரில் லோ இம்மர்ஷன், ஹை இம்மர்ஷன் என 2 வகை விளையாட்டுகள் உள்ளன. இந்த முறையில் ஆபரேஷனின் தன்மைக்கு ஏற்ப நோயாளிகளுக்கு வீடியோ விளையாட்டுகள் நிர்ணயிக்கப்படும். 60 வயதை கடந்த 25 பேர் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர். இந்த முறையில் மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷனால் தங்களுக்கு வலி இல்லை என்றே அவர்கள் தெரிவித்தனர். 

விர்சுவல் ரியாலிடி என்ற தெரபி முறையில் நோயாளிகளுக்கு ஆபரேஷன் மேற்கொள்ளப்படும்போது மயக்க மருந்து கொடுக்கப்படுவதில்லை. அவர்களுக்கு வலி தெரியாமல் இருக்க புதிய முறையில் அவர்களின் கவனம் வேறு செயல்களில் திருப்பப்படும். உதாரணமாக, அவர்களை வீடியோ கேம் விளையாட வைத்து அதில் அவர்கள் மிகவும் ஆர்வத்துடன் ஈடுபடும்போது ஆபரேஷன் மேற்கொள்ளப்படும். வலியை அவர்கள் உணர்வதில்லை. ஆபரேஷன் செய்யும் நேரமும் மிகவும் குறைவு என்கிறார் ஆராய்ச்சி குழுவைச் சேர்ந்த மயக்க மருந்து நிபுணர் சாம் ஷரர்.

‘ஹாட்டஸ்ட்’ அழகியாக இங்கிலாந்து நடிகை தேர்வு!

 
இங்கிலாந்து நடிகை, மாடல் அழகி ரோசி ஹன்டிங்டன் ஒயிட்லி (24). பள்ளி படிப்பை முடிப்பதற்கு முன்பே மாடலிங் தொழிலுக்கு வந்தவர். உள்ளாடை தயாரிப்பில் உலகப் புகழ் பெற்ற விக்டோரியாஸ் சீக்ரட் நிறுவனம், ஆடைகள், சென்ட் தயாரிக்கும் பர்பரி நிறுவனம் ஆகியவற்றில் இவர்தான் நம்பர் ஒன் மாடல் அழகி. சினிமாவிலும் நடிக்க ஆரம்பித்துள்ளார். ‘டிரான்ஸ்பார்மர்கள்’ என்ற வரிசையில் ஹாலிவுட் படங்கள் 2007-ம் ஆண்டு முதல் வெளியாகி வருகின்றன. இந்த வரிசையின் 3-வது படமான ‘டார்க் ஆப் த மூன்’ கடந்த ஜூன் 29-ம் தேதி வெளியானது.

பிரான்சை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் வெளிவரும் ‘எல்லீ’ பேஷன் இதழ் சமீபத்தில் ஒரு சர்வே நடத்தியது. இதில் இந்த ஆண்டின் சூப்பர் மாடல் அழகியாக ரோசியை நேயர்கள், ரசிகர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். உலகம் முழுவதும் வெளிவரும் எப்.எச்.எம். இதழ் ‘கவர்ச்சியான பெண் யார்’ என்று போட்டி நடத்தியது. இதில் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று நம்பர் ஒன் அழகியாக ரோசி தேர்வாகியுள்ளார். உலகம் முழுவதும் உள்ள நடிகைகள், மாடல் அழகிகளை அலசி ஆராய்ந்து ‘ஹாட் அழகிகள்’ என்ற பட்டியலை மேக்சிம் இதழ் வெளியிட்டுள்ளது. அதிலும் நம்பர் ஒன் இடத்தை பிடித்திருக்கிறார் ரோசி. ‘‘என் உதடுகள் பெரிதாக இருக்கும். படிக்கும் காலத்தில் இதை சொல்லி தோழிகள் கிண்டல் செய்வார்கள். அதுதான் எனக்கு தற்போது அழகி பட்டத்தை பெற்று தந்திருக்கிறது’’ என்கிறார் ரோசி.

ஷாரூக்கின் 'ரா ஒன்' படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றம்?

ஷாரூக்கான் சூப்பர் ஹீரோவாக நடித்துள்ள படம் 'ரா ஒன்'. ஷாரூக்கின் இந்த ரா ஒன் படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் எந்திரன் படத்தை நினைவுப்படுத்துவதாக செய்திகள் உலா வந்த நிலையில் எந்திரன் வேறு, ரா ஒன் வேறு. நாங்கள் ரஜினி மீது பெரும் மரியாதை வைத்துள்ளோம்.அவரை கவுரவிக்கும் விதத்தில் காட்சியும் வைத்துள்ளோம் என்று நேற்று முன்தினம் ஷாருக்கான் கூறியிருந்தார். 


தான் கூறியபடி, படத்தில் தன்னை ஆபத்திலிருந்து காப்பாற்றும் சூப்பர் பவர் பாத்திரமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போல் அனிமேஷன் (அ) அவரை போல் உருவம் கொண்ட ஆட்களை வைத்து ஷூட்டிங்க ஷாரூக் திட்டுமிட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் ஷூட்டிங்க செய்த அந்த காட்சியை ரஜினியிடம் ஷாரூக் காண்பிக்க போவதாகவும், ரஜினி ஒப்புக் கொண்டால், மீண்டும் அந்த காட்சியை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து ஷூட்டிங் செய்ய ஷாரூக் திட்டுமிட்டுள்ளதாக தெரிகிறது. 

அப்படி ரஜினி ஒப்புக் கொண்டால் இதற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் அடுத்த மாதம் (அக்டோபர்) 4-ந்தேதி நடக்கிறது. 

ஷாரூக்கான் வில்லன்களிடம் சண்டை போடும் போது ஒரு கட்டத்தில் நிராயுதபாணியாக நிற்பார். அவர் உயிரை வில்லன்கள் பறிக்க ஆயத்தமாகும் தருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி ஒரு சூப்பர் காரில் தனக்கே உரிய ஸ்டைலில் சர்ரென்று வந்து நிற்பார்.

அவரது கார் வில்லன்களின் ஆயுதங்களை தன்னுடன் ஈர்த்து ஷாருக்கானை காப்பாற்றும். அப்போது ஷாரூக்கின் உடனிருக்கும் கதாநாயகி கரீனா கபூர் யார் இவர் என்று ரஜினியை பார்த்து கேட்பார். உடனே ரஜினி தனக்கே உரிய பஞ்ச் வசனம் பேசியடி காரிலிருந்து இறங்குவாராம். அவரை ஷாரூக்கான் மிகுந்த மரியாதையுடன் அறிமுகப்படுத்துவது போன்று இக்காட்சி எடுக்கப்படுகிறதாம். தீபாவளிக்கு ரா-ஒன் படம் ரிலீசாகிறது இது தமிழ், தெலுங்கிலும் டப்பிங் செய்யப்படுகிறது.

சல்மானுக்கு முத்தம் கொடுத்தது உண்மைதான்!

ரெடி படத்தில் சல்மான்கானுக்கு ஒரு காட்சியில் முத்தம் கொடுத்தது உண்மைதான் என நடிகை அசின் கூறியுள்ளார். இதுகுறித்து அசின் கூறுகையில், "ரெடி படத்தில் முத்தக்காட்சி உள்ளது. ஆனால் அது மற்றவர்கள் எதிர்பார்ப்பது மாதிரி ஆபாசமாக இருக்காது. என் கன்னத்தில் சல்மான்கான் முத்தமிடுவது போன்றுதான் அக்காட்சி உள்ளது. நானும் அவருக்கு முத்தம் தருவது போல அமைத்துள்ளனர். ஆனால் கவர்ச்சிக்கு அளவு வைத்துள்ளேன். அதை மீற மாட்டேன். ரெடி குடும்ப பாங்கான படம். சல்மான்கானுக்கு என்னை ரொம்ப பிடிக்கும். அவருக்கு யாராவது பிடித்து விட்டால் அவர்களுக்காக எதுவும் செய்வார்" என்றார்.

மீண்டும் வதந்தி : பூமிகா அதிர்ச்சி!

பூமிகா, கணவர் பரத்தை விவாகரத்து செய்கிறார் என்று வந்த கிசுகிசுக்களை ஏற்கனவே பூமிகா மறுத்த நிலையில் டோலிவுட்டில் மீண்டும் அதே கிசுகிசு பரவி இருக்கிறது. இது குறித்து பூமிகா கூறியது: இதுபோன்ற வதந்தி எப்படி பரவுகிறது என்றே தெரியவில்லை. இந்த கேள்விக்கு பதில் சொல்லியே நான் சோர்வடைந்துவிட்டேன். எனக்கும், பரத்துக்கும் உறவு ஸ்டிராங்காக இருக்கிறது. எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. பாலிவுட்டில் ஷில்பா ஷெட்டி-ராஜு, மலாய்கா-அர்பாஸ் ஆகிய தம்பதிகளும் பிரிந்துவிட்டதாக எழுதுகிறார்கள். ஆனால் அவர்கள் சேர்ந்து வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். ‘இன்னும் நடிக்க வராதது ஏன்? என்று கேட்கிறார்கள். நடிப்புக்கான இடைவெளி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. பட வாய்ப்புகள் நிறைய வருகிறது. சிறு இடைவெளிக்கு பிறகு நடிக்கும் வேடம் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். வெறும் கிளாமர் வேடங்களை ஏற்க விருப்பமில்லை. இப்போது ஒரு படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. எல்லாம் சரியாக வந்தால் வரும் ஆகஸ்ட் முதல் ஷூட்டிங். அது காமெடி கதை படம்.

அமெரிக்க தொழிலதிபருடன் கல்யாணமா?

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை த்ரிஷாவுக்கு திருமணம், மாப்பிள்ளை ரெடி என்று செய்தி வெளியாவதும், அவர் இல்லையில்லை அது பொய் செய்தி என மறுப்பதும் வழக்கமாகிவிட்டது. அந்த வகையில் இப்போது மேலும் ஒரு செய்தியும் விளக்கமும் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், த்ரிஷா இந்த செய்திகளுக்கு விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், "எனக்கு திருமணம் என்றால் நிச்சயம் நான் அனைவருக்கும் சொல்லிவிட்டுத்தான் செய்வேன். அது காதல் திருமணமாகவே இருந்தாலும். ஆனால் நான் பெற்றோர் முடிவு செய்யும் மாப்பிள்ளையை திருமணம் செய்வேன். எப்போது என்பதை நான்தான் சொல்வேன். மற்றவர்கள் முடிவு செய்யக்கூடாது," என்றார்.

ஜோடி இல்லாமல் தவிக்கும் கமல்?

மறுப்பு தெ‌ரிவிப்பதை தவிர வேறு எதுவும் விஸ்வரூபம் குறித்து பேசுவதில்லை என்று முடிவு செய்திருக்கிறார் கமல். முக்கியமாக ஹீரோயின் விஷயத்தில். சோனாக்‌சி சின்கா படத்தில் இல்லை என்றான பிறகு அரை டஜன் நடிகைகளின் பெயர்கள் அடிபட்டன. அடிபட்டதோடு ச‌ரி, கமலால் அங்கீக‌ரிக்கப்படவில்லை. இதில் அனுஷ்காவும் உண்டு. ஆச்ச‌ரியமாக அனுஷ்காவின் பெயர் இன்னொரு ரவுண்ட் வந்திருக்கிறது. விஸ்வரூபத்துக்கு அனுஷ்காவே போதும் என்று கமல் முடிவு செய்திருப்பதாக ஆழ்வார்பேட்டை அலுவலகம் கிசுகிசுக்கிறது.

தகவல் 
தினகரன் நாளிதழ்.

நிஜமாகவே அடி வாங்கிய ‘ஜெயம்‘ ரவி

ஆதிபகவான் படத்தில் ஜெயம் ரவி இரண்டு வேடங்களில் நடிப்பதாக புதிய தகவல். ஆதிபகவான் அமீர் இயக்கும் படம். ஜெயம் ரவி, நீது சந்திரா நடித்துள்ளனர். பாங்காங்கில் பெரும் பகுதி படப்பிடிப்பு நடத்தப்பட்டது. ஜெயம் ரவி இந்தப் படத்தில் இரண்டு வேடங்களில் நடிப்பதை அமீரும் ஒப்புக் கொண்டிருக்கிறார். ஹீரோ, வில்லனா இல்லை வேறு வேடமா என்பது மட்டும் ரகசியம். ‘ஆதிபகவான்' சண்டை காட்சியில் ஸ்டண்ட் கலைஞர்கள் தாக்கியபோது டைமிங் மிஸ் ஆகி நிஜமாகவே அடி வாங்கினார் ‘ஜெயம்‘ ரவி.

தகவல்
தினகரன் நாளிதழ்.

சரணை மன்னித்துவிட்டேன் : சோனா!

தன்னிடம் கடிதம் மூலம் வருத்தமும் மன்னிப்பும் தெரிவித்துவிட்டார் சரண் என்றும் இதனால் அவரை மன்னித்துவிட்டதாகவும் நடிகை சோனா தெரிவித்துள்ளார். மதுவிருந்தில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக எஸ்பிபி சரண் மீது புகார் தெரிவித்தார் சோனா. இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இதில் எஸ்பிபி சரணுக்கு இருவார கால முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த இரு வாரங்களாக இந்த விவகாரம் பெரும் பரபரப்புடன் பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடிதம் மூலம் சரண் மன்னிப்பு கேட்டுள்ளதால் அவரை மன்னித்துவிட்டேன் என்று தற்போது சோனா அறிவித்திருக்கிறார். ஆனால் இதுகுறித்து எஸ்பிபி சரண் தரப்பில் எதுவும் கூறப்படவில்லை. இதன் மூலம் சோனா-சரண் பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.

தகவல்
தினகரன் நாளிதழ்.

பல கோடி ரூபாய் செலவில் கட்டிய ஆடம்பர பங்களா-சச்சின்

கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மும்பையில் புதிதாக கட்டியுள்ள 5 மாடி ஆடம்பர பங்களாவில் குடியேறினார். மும்பை பாந்த்ரா கலாநகரில¢ உள்ள ‘லேமர் அபார்ட்மென்ட்’டில் சச்சின் குடியிருந்து வந்தார். இதை அவருக்கு விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டில் மகாராஷ்டிரா அரசு வழங்கியது. அந்த வீட்டில் இருந்து கொண்டே, பாந்த்ரா மேற்கு பெரி கிராஸ் ரோடு பகுதியில் ரூ. 39 கோடியில் பழைய பங்களா ஒன்றை சச்சின் வாங்கினார்.

பின்னர் அதை இடித்து விட்டு 5 மாடிகள் கொண்ட புதிய ஆடம்பர பங்களாவை பல கோடி ரூபாய் செலவில் கட்டியுள்ளார். இந்த பங்களாவின் முதல் மாடியும், 2வது மாடியின் பாதியும் நிலத்துக்கு கீழ் கட்டப்பட்டுள்ளன. சச்சின் கார் பிரியர் என்பதால் நிலத்துக்கடியில் இருக்கும் 2வது தளத்தில் 45 முதல் 50 கார்களை நிறுத்தக் கூடிய வசதி செய்யப்பட்டுள்ளது. 

முதல் மாடியில் சமையல் அறை, கண்காணிப்பு அறை மற்றும் வேலைக்காரர்கள் தங்கும் அறைகள் இருக்கின்றன. தரை தளத்தில் பெரிய வரவேற்பு அறை, சச்சின் குடும்பத்தினரின் பிரத்யேக சாப்பாட்டு அறை, பிள்ளையார் கோயில் ஆகியவை உள்ளன. சச்சின் பிள்ளையார் பக்தர் என்பது குறிப்பிடத்தக்கது. இதே தளத்தில் சச்சின் பெற்ற ஏராளமான விருதுகளை பார்வைக்கு வைப்பதற்கான பிரத்யேக அரங்கமும் கட்டப்பட்டுள்ளது. முதல் மாடி சச்சினின் மகன் அர்ஜுன், மகள் சாராவுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இருவருக்கும் இந்த மாடியில் தனித்தனி அறைகள் உள்ளன. மேல் மாடி சச்சின் & அஞ்சலி தம்பதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மொட்டை மாடியில் நீச்சல் குளம் கட்டப்பட்டுள்ளது. நவராத்திரி தினத்தன்று புது பங்களாவில் குடியேற சச்சின் விருப்பப்பட்டார். அதன்படி, குடும்பத்துடன் நேற்று குடியேறினார். முன்பு தங்கியிருந்த வீடு வேறு விளளையாட்டு வீரருக்கு அரசு வழங்கும் என்றும் அவர் கூறினார். புதிய பங்களாவில் சச்சின் குடியேறியதையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவிக்க ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தனர். அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்டார் சச்சின்.

பாந்த்ரா மேற்கு பெரி கிராஸ் ரோடு பகுதியில் ரூ.39 கோடியில் பழைய பங்களாவை வாங்கினார். அதை இடித்து விட்டு 5 மாடிகள் கொண்ட புதிய ஆடம்பர பங்களாவை கட்டியுள்ளார். 

பங்களாவின் முதல் மாடியும், 2வது மாடியின் பாதியும் நிலத்துக்கு கீழ் கட்டப்பட்டுள்ளன. 2வது தளத்தில் 45 முதல் 50 கார்களை நிறுத்தக் கூடிய வசதி உள்ளது. 

முதல் மாடியில் சமையல் அறை, கண்காணிப்பு அறை மற்றும் வேலைக்காரர்கள் தங்கும் அறைகள் இருக்கின்றன. 

தரை தளத்தில் பெரிய வரவேற்பு அறை, சச்சின் குடும்பத்தினரின் பிரத்யேக சாப்பாட்டு அறை, பிள்ளையார் கோயில் ஆகியவை உள்ளன.

தகவல்
தினகரன் நாளிதழ்.

பிலிப்பைன்ஸ் சூறாவளிக்கு 31 பேர் பலி



பிலிப்பைன்ஸ் நாட்டில் 'நெசட்' சூறாவளி தாக்கியதில் பலியானோர் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு மாதமாகவே பிலிப்பைன்சில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், நாட்டின் வடக்கு பகுதியில் 'நெசட்' சூறாவளி செவ்வாயன்று தாக்கியது. இந்த புயல் நேற்று சீனாவை நோக்கி நகர்ந்தது. இதையடுத்து, கடும் சூறைக் காற்று வீசியதுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் தலைநகர் மணிலா வெள்ளக்காடாக காட்சியளின்கிறது. சூறாவளியால், ஸி110 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தகவல்
தினகரன் நாளிதழ் 

25 கோடி வருடங்களுக்;கு முன்னரே தோன்றிய ~சுனாமி'


2004 ஆம் அண்டின் பின்னரே ‘சுனாமி’ என்ற வசனம் பிரபலமானது. அதன் பயங்கரம் புரிந்தது. ஆனால் 25 கோடி ஆண்டுகளுக்கு முன்பே சுனாமி தோன்றியதாக ஆய்வுகள் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளன.

இந்திய பெருங்கடல் தோன்றுவதற்கு முன்பு பல கடல்கள் ஒன்றாக இருந்த நேரத்தில் காஷ்மீர் பகுதியில் சுனாமி ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நில அமைப்புகள், புவியியல் மாற்றங்கள், சுனாமி ஆகியவை தொடர்பாக அமெரிக்காவின் மசாசூசட்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் மைக்கேல் ப்ருக்பீல்டு ஆராய்ச்சி செய்து வருகிறார்.

ஸ்ரீநகரில் உள்ள காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் புவியியல், புவி இயற்பியல், புவி தகவலியல் துறைகள் சார்பில் அவரது சிறப்புரை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

அதில் அவர் தெரிவித்த தகவல்கள் பல கோடி ஆண்டுகளுக்க முன்பு கண்டங்கள் தற்போது இருப்பது போல பல பிரிவுகளாக இல்லை 20 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டிரயாசிக் காலத்தின் போது லாரேசியா, கோண்ட்வானா என இரு பிரிவுகள் மட்டுமே இருந்தன.

டேதிஸ் கடலால் அவை இரண்டாக பிரிக்கப்பட்டிருந்தன. 25 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்த டேதிஸ் கடலில் இருந்து எழுந்த ஆழிப் பேரலை, குரியுல் கணவாய் பகுதியை பயங்கரமாக தாக்கியுள்ளது. இப்பகுதி தற்போது காஷ்மீரில் இருக்கிறது. டேதிஷ் கடல்தான் பின்னர் பலவிதமாக உருமாறி இந்திய பெருங்கடலாக மாறியது.

காஷ்மீரின் குரியுல் பள்ளத்தாக்கு பகுதியில் பல்வேறு விதமான படிமங்கள் கிடைத்துள்ளன. உலகின் பல பகுதிகளை சேர்ந்த தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்களும் இங்கு ஆய்வு நடத்தி வருகின்றனர். 25 கோடி ஆண்டுகளுக்கு முன்பு சுனாமி வந்ததற்கான படிம ஆதாரங்களும் கிடைத்திருக்கின்றன. இது தொடர்பாக மேலும் ஆய்வுகள் நடத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

பிலிபைன்ஸில் சூறாவளி; சிறு குழந்தை பலி; ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்வு


சக்திவாய்ந்த நெசாட் சூறாவளி வட பிலிபைன்ஸை நேற்று தாக்கியது. அத்துடன் இந்த சூறாவளியால் தலைநகர் மனிலாவில் கடும் காற்றுடன் மழை பெய்து வருகிறது.

மணிக்கு 170 கிலோ மீற்றர் வேகத்தில் வீசிவரும் சூறாவளியால் பிலிபைன்ஸில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூறாவளி காரணமாக சிறு குழந்தை ஒன்று பலியானது. பிலிபைன்ஸின் மத்திய மாகாணமான கடன்டுவான்ஸ் பகுதியில் ஆற்றில் விழுந்து இந்த குழந்தை பலியாகியுள்ளது.

இது தவிர நான்கு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். எனினும் பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சூறாவளி அபாயத்துக்கு உள்ளாகியுள்ள மத்திய அபே மாகாணத்தில் ஒரு லட்சத்திற் கும் மேற்பட்டோருக்கு இடம்பெயருமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.

அதேபோன்று தலைநகர் மனிலாவில் நிலைமை மோசமடைந்துள்ளது. தொடர்ந் தும் காற்றுடன் மழை பெய்து வருவதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதோடு பாதைகள் எங்கும் நீர் நிரம் பிக் காணப்படுகிறது. இத னால் விமான சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதோடு பாடசாலை கள், அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.

தொடர்ந்து ஓரிரு தினங்கள் பிலிபைன்ஸை தாக்கும் என எதிர்பார்க்கப்படும் இந்த சூறாவளி நாளை அளவில் தென் சீன கடற்கரையை எட்டும் என ஹொங்கொங் காலநிலை ஆய்வுமையம் குறிப்பிட்டுள்ளது.

கடைசிப் பந்தில் அதிர்ச்சி வெற்றி பெற்றது மும்பை அணி

சம்பியன்ஸ் லீக் பரபரப்பான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில் வெற்றி பெற்றது. கடைசி பந்து வரை போராடிய டிரினிடாட் அணி கைக்கு எட்டிய வாய்ப்பை கோட்டை விட்டது.

இந்தியாவில் மூன்றாவது சம்பியன்ஸ் லீக் ‘டுவென்டி – 20’ தொடர் நடக்கிறது. நேற்றுமுன்தினமிரவு நடந்த ‘ஏ பிரிவு லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் டிரினிடாட் அண்ட் டுபாகோ (மே. தீவுகள்) அணிகள் மோதின. நாணயச் சுழற்சியில் வென்ற டிரினிடாட் அணி தலைவர் டெரன் கங்கா துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.

மும்பை பந்து வீச்சில் டிரினிடாட் அணி துவக்கத்திலேயே ஆட்டம் கண்டது. வேகத்தில் மலிங்கவும், சுழலில் தலைவர் ஹர்பஜனும் மிரட்ட விக்கெட்டுகள் மடமடவென சரிந்தன. மலிங்க பந்தில் பரத் (11) வெளியேறினார். சிம்மன்ஸ் (21), ரன் அவுட்டானார். டெரன் கங்கா (5) சோபிக்கவில்லை.

ஹர்பஜன் வலையில் ராம்தின் (0), டெரன் பிராவோ (18), ஷெர்வின் கங்கா (2) சிக்கினர். மலிங்கா பந்தில் கூப்பா (0) காலியானார். போராடிய முகமது (23), போலார்ட் வேகத்தில் வீழ்ந்தார் டிரினிடாட் அணி 16.2 ஓவரில் 98 ஓட்டங்களுக்கு சுரண்டது. இதன் மூலம் ‘டுவென்டி – 20’ அரங்கில் தனது குறைந்த ஸ்கோரை பெற்றது. தவிர சாம்பியன்ஸ்லீக் வரலாற்றில் 8வது குறைந்த ஸ்கோரை பதிவு செய்தது. மும்பை சார்பில் ஹர்பஜன் 3, மலிங்கா 2 விக்கெட் வீழ்த்தினர்.

சுலப இலக்கை விரட்டிய மும்பை அணி திணறல் துவக்கம் கண்டது. பத்ரி பந்தில் பிலிஜார்ட் (2) அவுட்டனார். இதற்கு பின் ராம்போல் மிரட்டினார் இவரது வேகத்தில் சுமன் (10), பிராங்க்ளின் (0), சைமண்ட்ஸ் (0), வெளியேற சிக்கல் ஏற்பட்டது. நரைன் பந்தில் பொலர்ட் (9) போல்டாக மும்பை அணி 5 விக் கெட்டுக்கு 33 ஓட்டங்கள் எடுத்து தத்தளித் தது. பின் ராயுடு சதிஷ் இணைந்து பொறுப்பாக ஆடினர். சதிஷ் 14 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ஹர்பஜன் (9), ஒரு சிக்சர் அடித்த திருப்தியுடன் வெளியேற மீண்டும் நெருக்கடி ஏற்பட்டது. இறுதியில் ராயுடு, மலிங்கா துணிச்சலாக போராடினர். கடைசி 6 பந்தில் வெற்றிக்கு 11 ஓட்டங்கள் தேவைப்பட்டன. ஷெர்வின் கங்கா பந்து வீசினார். முதல் பந்தில் ராயுடு ஒரு ஓட்டம் எடுத்தார். 2வது பந்தில் மலிங்க ஒரு ‘சூப்பர் சிக்கர்’ அடித்தார்.

3வது பந்தில் ஒரு ஓட்டம் 4 வது பந்தில் மலிங்கா (15) ஆட்டமிழந்தார். 5வது பந்தில் ராயுவும் (36) ரன் அவுட்டாக டென்ஷன் எகிறியது. கடைசி பந்தில் 2 ஓட்டங்கள் தேவைப்பட்டன. இம்முறை பந்தை அடித்த சாகல் 2 ஓட்டங்கள் ஓடினார். இவரை ரன் அவுட் செய்யும் வாய்ப்பை விக்கெட் காப்பாளர் ராம்தின் கோட்டை விட மும்பை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 99 ஓட்டங்கள் எடுத்து திரில் வெற்றி பெற்றது.

ஆட்ட நாயகன் விருதை டிரினிடாட் வீரர் ராம்போல் வென்றார்.

பிருத்வி 2 ஏவுகணை சோதனை வெற்றி


தரையில் ஒரு இலக்கிலிருந்து மற்றொரு இலக்கை நோக்கி பாயும் பிருத்வி 2 ரக ஏவுகளை ஒரிசாவின் பாலாசூர் கடற்கரைப் பகுதியில் நேற்று முன்தினம் வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டது.

உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட பிருத்வி 2 ஏவுகணை 350 கிலோ மீற்றர் தூரம் வரை அணுகுண்டை ஏந்திச் சென்று எதிரியின் இலக்கைத் தாக்க வல்லது ஏற்கனவே இந்த ஏவுகணை பலமுறை வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டுள்ளது.

மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் இந்த ஏவுகணை நேற்று முன்தினம் பாலாசூர் பகுதியில் இருந்து ஏவப்பட்டு இராணுவ அதிகாரிகளால் பரிசோதிக்கப்பட்டது.

ஒன்பது மீற்றர் நீளம் கொண்ட இந்த ஏவுகணை வங்கக் கடலில் நிறுத்தப்பட்டிருந்த இலங்கை துல்லியமாகச் சென்று தாக்கியதாக இராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறைத் தலைவர் சரஸ்வத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் எலி மூலம் பரவும் ஹன்டா வைரஸ் கண்டுபிடிப்பு

ஆந்திராவில் இருந்து சிகிச்சைக்காக வந்த மூன்று பேர் எலிகள் மூலம் பரவும் ஹண்டா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதை தமிழக டாக்டர்கள் கண்டறிந்துள்ளனர். அவ்வாறு சிகிச்சை பெற வந்த பெண் ஒருவர் நேற்று முன்தினம் மரணமடைந்தார். இது குறித்து தமிழக அரசிற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தமிழகத்திலும் ஊடுருவியிருக்குமா என்பது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

ஆந்திர மாநிலம், நெல்லூரைச் சேர்ந்தவர் உமாதேவி 67. இவர் உள்ளிட்ட மூன்று பேர் கடும் காய்ச்சல், தலைவலி, வறட்டு இருமல் மற்றும் சுவாசக் கோளாறு காரணமாக அங்குள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்கள் எந்த நோயால் பாதிக்கப்பட்டனர் என்பதை, அங்குள்ள டாக்டர்களால் கண்டறியப்படவில்லை.

மூவரும் சென்னை, பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்குள்ள டாக்டர்கள் குழுவினர், பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர். இதன் பலனாக அந்த மூவரும் ஹண்டா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த மூவரில் ஒருவரான உமாதேவி நேற்று முன்தினம் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். அவர் ஹன்டா வைரஸ் நோயால் தாக்கப்பட்டு இறந்தது குறித்து, தமிழக அரசுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் அந்த வைரசின் தாக்குதல் இருக்குமா என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

கொரியாவிலிருந்து வந்த காய்சச்ல் :

வறன்டா வைரஸ் குறித்து குளோபல் மருத்துவமனையின் டாக்டர்களான பழனியப்பன் மற்றும் விஜய் ராகுலன் ஆகியோர் கூறியதாவது :-

ஹண்டா வைரஸ் என்பது எலிகள் மூலம் மனிதர்களுக்குப் பரவும் நோய் இது. விவசாயிகளைப் பெருமளவு தாக்கும் மனிதன் மூலம் மனிதனுக்கு இந்த வைரஸ் பரவுவதில்லை. இந்த வைரஸ் கொரியா நாட்டில் இருந்து வந்தது. அங்கு, அந்த காய்ச்சலுக்கு, ‘கொரியன் மெர்ஜி பீவர்’ என்பர்.

இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் சாதா வைரஸ் காய்ச்சல் அறிகுறிகள் தெரியும். காய்ச்சல் வறட்டு இருமல், தலைவலி ஏற்படும் பின் சுவாசக் கோளாறு இரத்தப் போக்கு ஏறபட்டு, உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பாக செயலிழந்து விடும். இறுதியில், மரணம் ஏற்படும். இந்த வைரஸ் தாக்கிய ஒருவர் தன் உடலில் உள்ள எதிர்ப்பு சக்திக்கு ஏற்ற வகையில் பாதிப்பை உணர்வர் இவ்வாறு டாக்டர்கள் கூறினர்.

சிறந்த விளையாட்டு திரைப்படமாக லகான் தேர்வு


விளையாட்டை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக ஆமீர் கானின் லகான் திரைப்படமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் "டைம்" பத்திரிகை இதுவரை வெளிவந்த 25 சிறந்த விளையாட்டுத் திரைப் படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் லகான் 14 வது இடத்தைப் பிடித்துள்ளது.

சர்வதேச அளவில் இந்திய திரைப்படத்துக்கு கிடைத்துள்ள கெளரவமாக இது கருதப்படுகிறது. 2001 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்த ஹிந்தி திரைப்படம் சிறந்த வெளிநாட்டு மொழிப் படப்பிரிவில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

கிரிக்கெட்டை மையமாகக் கொண்டது இந்தத் திரைப்படம். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்திய கிராமத்தைச் சேர்ந்தவர்கள், ஆங்கிலேயர்களை கிரிக்கெட் போட்டியில் வெல்வதே இதன் திரைக்கதை. இத்திரைப்படத்தை அஸ¤தோஷ் கவாரிகெர், எழுதி இயக்கியிருந்தார்.

மீண்டும் சல்மானுடன் கத்ரீனா!


நடிகர் சல்மான் கானும், நடிகை கத்ரீனா கைபும் ஒரு காலத்தில் காதலர்களாக இருந்தார்கள் என்பது உலகம் அறிந்ததே. ஆனால் அவர்களுக்குள் மீண்டும் காதல் உணர்வு துளிர்விட்டுள்ளது என்று பேசப்படுகிறது.

யாஷ் ராஜ் பிலிம்ஸின் ஏக் தா டைகர் என்ற இந்தி படத்தில் சல்மான் கானும், கத்ரீனா கைபும் ஜோடி சேர்ந்துள்ளனர். படப்பிடிப்பில் சல்மானும், கத்ரீனாவும் மிக நெருக்கமாக உள்ளனராம். 

சல்மானுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதியில் தான் நரம்புக்கோளாறு காரணமாக அறுவை சிகிச்சை நடந்தது. இதனால் படப்பிடிப்பில் கத்ரீனா சல்மானை விழுந்து விழுந்து கவனித்துக் கொள்கிறாராம். 

கத்ரீனா கைப் படப்பிடிப்பில் சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததும் அவரை தூக்கிவிட முதலில் வந்தது சல்மான் தான். அது மட்டுமின்றி கத்ரீனா மினி ஸ்கர்ட் போட்டுக் கொண்டு சைக்கிளில் ஏறும்போது அவரது உள்ளாடை தெரியவே அதை யாரும் பார்த்துவிடக்கூடாது என்பதற்காக அவரை மறைத்துக் கொள்ள சல்மான் ஓடினார். ஆனால் அதற்குள் புகைப்படக்காரர்கள் போட்டோ எடுத்துவிட்டனர்.

போகிற போக்கை பார்த்தால் இருவரும் ஒன்று சேர்ந்துவிடுவார்கள் போலும். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

தமிழ் சினிமாவில் ஸ்ருதிக்கு முக்கிய இடம்



நடிகர் கமல்ஹாசனின் இசை ஞானத்தை போல, அவரது மகள் ஸ்ருதிஹாசனுக்கும் உள்ளது என இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் பாராட்டி உள்ளார்.

இதுகுறித்து இசை அமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் கூறியதாவது, ஏழாம் அறிவு படத்தில் 6ம் நூற்றாண்டில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்ட ஒரு பாடல் வருகிறது. இதற்காக பண்டைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட இசைக் கருவிகளை வாங்க பல இடங்களில் தேடினேன்.

கடைசியில் சீனாவில் நடந்த ஒரு ஏலத்தில் பல பணக்காரர்களுடன் போட்டி போட்டு அந்த இசைக் கருவிகளை வாங்கினேன். அவற்றை பயன்படுத்தி மிகவும் சிரமப்பட்டு இசை அமைத்துள்ளேன்.

இந்த படத்தில் நடித்துள்ள ஸ்ருதிஹாசன் இசையமைத்த 'உன்னைப்போல் ஒருவன்' பாடல்கள் என்னை மிகவும் கவர்ந்தது. அவருக்கு இசை ஞானம் மட்டுமின்றி, சிறந்த குரல்வளமும் உள்ளது. நடிகர் கமல்ஹாசன் இசை ஞானம் கொண்டவர்.

அவரது ஞானம், ஸ்ருதிக்கு இயற்கையாகவே வந்துள்ளது. அவர் படங்களில் நடிப்பதோடு நின்றுவிடாமல், இசையமைப்பது, பாடுவது ஆகிய பணிகளிலும் ஈடுபட வேண்டும், என்றார்.

தமிழ் சினிமாவில் ஸ்ருதிக்கு முக்கிய இடம்

இதேபோல நடிகர் சூர்யாவும் ஸ்ருதியின் நடிப்பைப் புகழ்ந்துள்ளார்.இதுகுறித்து சூர்யா கூறுகையில், ஸ்ருதியுடன் நடிக்க நான் பயந்தேன். கமல்ஹாசனின் மகளுடன் எப்படி நடிப்பது என்ற பயம்தான் அது. ஆனால் அவருடன் நடித்தபோதுதான் அவருக்கு தமிழ் சினிமாவில் முக்கிய இடம் உள்ளதைப் புரிந்து கொண்டேன் என்றார் சூர்யா.

Health